மன்னாரில் உப்பு கொள்வனவிற்கு மக்கள் முண்டியடிப்பு!

Date:

நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியாகிய செய்தியை தொடர்ந்து மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை(3) காலை கறி உப்பினை கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்துக் கொண்டனர்.

எனினும் மக்களுக்கு தேவையான உப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் தீப்பிடித்த கப்பலினால் கடலில் இரசாயன பொருட்கள் கலந்துள்ளமையினால் நாட்டில் உப்பு உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படலாம் என செய்திகள் வெளி வந்துள்ளது.

இந்த நிலையில் மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை(3) காலை முதல் பொதி செய்யப்பட்ட அயடின் கலந்த உப்பு பக்கற்றுக்களை கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்ததோடு, மக்கள் தமக்கு தேவையான உப்பு பக்கற்றுக்களையும் கொள்வனவு செய்துள்ளனர்.

எனினும் மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான உப்பு போதிய அளவு உள்ளதாகவும் மக்கள் இவ்வாறு முண்டியடித்தக் கொண்டு உப்பினை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் தற்போது அதிக அளவு உப்பு கையிருப்பில் உள்ளதோடு, பெரும் போக உப்பு உற்பத்தியும் தற்போது இடம் பெற்று வருவதாக மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- சீன தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சீன ஜனாதிபதி ஜி...

68 வயது மாமியை வல்லுறவுக்குள்ளாக்கிய மருமகன்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனது 68 வயதுடைய மாமியாரின் கழுத்தை நெரித்துக்...

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து வழுக்கி விழுந்த வெளிநாட்டு பெண் மரணம்

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்ததில் இத்தாலியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்