தன் காதல் மனைவியான நடிகை நிஷா ராவலை தான் தாக்கவில்லை என்றும், அவரே தன் தலையை சுவரில் மோதிக் கொண்டார் என்றும் பிரபல நடிகர் கரண் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவர்கள் கரண் மெஹ்ராவும், அவரின் மனைவி நிஷா ராவலும். இந்நிலையில் நிஷா ராவல் அளித்த புகாரின்பேரில் கரண் மெஹ்ராவை மும்பை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தார்கள். மறுநாள் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
கரண் தன்னுடன் தகராறு செய்து தன் தலையை சுவரில் முட்டியதில் காயம் ஏற்பட்டதாக நிஷா தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து கரண் மெஹ்ரா கூறியிருப்பதாவது,
நிஷா தான் பிரச்சனையை ஆரம்பித்தார். அவர் என்னை திட்டயதுடன் மட்டுமில்லாமல் துப்பவும் செய்தார். எங்களுக்கு இடையே சில காலமாக பிரச்சனையாக இருக்கிறது. அதனால் பிரிந்து சென்றுவிடலாம் என்கிற யோசனையில் இருக்கிறோம்.
இந்நிலையில் தான் பிரச்சனையை தீர்த்து வைக்க நிஷாவின் சகோதரர் ரோஹித் செதியா வந்தார். நிஷாவும், ரோஹித்தும் சேர்ந்து ஜீவனாம்சமாக பெரிய தொகையை கேட்டார்கள். அவ்வளவு பெரிய தொகையை என்னால் கொடுக்க முடியாது என்றேன். இது தொடர்பாக தான் நேற்று முன்தினம் இரவும் பேச்சுவார்த்தை நடந்தது.
இரவு 10 மணி அளவில் வந்து ரோஹித் பணம் பற்றி பேசினார். பெரிய தொகையை கொடுப்பது சாத்தியமில்லை என்று நான் கூறியதும் சட்டப்படி பார்த்துக் கொள்கிறோம் என்றார் ரோஹித். அதன் பிறகு நான் என் அறைக்கு சென்றேன்.
என் அம்மாவுடன் போனில் பேசிக் கொண்டிருந்தபோது நிஷா அங்கு வந்து என்னையும், பெற்றோரையும், என் சகோதரரையும் திட்டினார். பயங்கரமாக சத்தம் போட்டார். மேலும் என் மீது எச்சில் துப்பினார். அறையை விட்டு வெளியே செல்லுமாறு நான் கூறியதற்கு, நான் என்ன செய்கிறேன் என்று பார் என மிரட்டிவிட்டு சென்றார்.
அதன் பிறகே அவரே சுவரில் முட்டிக் கொண்டு, நான் தான் தாக்கினேன் என அனைவரிடமும் தெரிவித்துள்ளார். நான் நிஷாவை தாக்கினேன் என்கிற சந்தேகத்தில் ரோஹித் என்னை அடித்தார் என்றார்.
கள்ளத்தொடர்பு வச்சிருக்கார், அடிச்சு மண்டைய உடைச்சுட்டார்: பிரபல நடிகரின் மனைவி கண்ணீர்
இதற்கிடையே கரணுக்கும், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக நிஷா தெரிவித்துள்ளார்.