தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்க முட்டை’ என்ற படத்தின் பிரபலமான இவர், தற்போது ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘டிரைவர் ஜமுனா’, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பதோடு சமூக நலனிலும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் கூட கொரானா குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கொரானாவின் இரண்டாம் அலையில் நாம் எல்லோருக்கும் இருக்கிறோம். முதல் அலையைவிட இரண்டாம் அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தயவு செய்து வேலையே வராதீர்கள். அப்படி அவசர தேவைக்கு வெளியே சென்றால் இரண்டை மாஸ்க் போட்டுக்கொண்டு செல்லுங்கள். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சானிடைசர் பயன்படுத்துங்கள். முக்கிய குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் ஆகியோர் ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முதல் டோஸ் கொரானா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.