27.1 C
Jaffna
December 29, 2024
Pagetamil
உலகம்

ஐஸ்லாந்தில் 20 ஆண்டுகளில் புவி வெப்பமடைதல் காரணமாக 750 சதுர கி.மீ. பனிப்பாறை இழப்பு!

புவி வெப்பமடைதல் காரணமாகமில்லினியம் தொடங்கியதிலிருந்து ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் சுமார் 750 சதுர கி.மீ. (290 சதுர மைல்) அல்லது அவற்றின் மேற்பரப்பில் ஏழு சதவிகிதத்தை இழந்துள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐஸ்லாந்து நாட்டின் நிலப்பரப்பில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை உள்ளடக்கிய பனிப்பாறைகள் 2019-ம் ஆண்டில் 10,400 சதுர கிலோமீட்டராக சுருங்கிவிட்டதாக ஐஸ்லாந்தின் அறிவியல் இதழான ஜோகுல் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. 1890 முதல், பனிப்பாறைகளால் சூழப்பட்ட நிலம் கிட்டத்தட்ட 2,200 சதுர கிலோமீட்டர் அல்லது 18 சதவீதம் குறைந்துள்ளது.

பனிப்பாறைகளின் இந்த குறைவு சதவீதம் கடந்த 20 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக இருப்பதாக பனிப்பாறை வல்லுநர்கள், புவியியலாளர்கள் மற்றும் புவி இயற்பியலாளர்களின் சமீபத்திய கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

மேலும், 2200-ம் ஆண்டுக்குள் ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் முற்றிலுமாக மறைந்து போகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.

ஐஸ்லாந்து நாட்டின் 3வது பெரிய பனிப்பாறை 810 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ஹோஃப்ஸ்ஜோகுல் பனிப்பாறை ஆகும். கடந்த 20 ஆண்டுகளில் பனியின் இழப்பு ஏறக்குறைய இந்த பனிப்பாறைக்கு சமமானஅளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Update 2 – தென்கொரிய விமான விபத்து

east tamil

தென்கொரியாவில் விமான விபத்து: 28 பேர் பலி

east tamil

அஜர்பைஜான் பயணிகள் விபத்துக்கு ரஷ்ய ஏவுகணை காரணமா?

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment