பிரபல தமிழ் சினிமா நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 73.தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமச்சந்திரன் காலமாகியுள்ளார். இவர் நாட்டுப்புறப் பாட்டு,எட்டுப்பட்டி ராசா, வீரத்தாலாட்டு,ராஜாதி ராஜா,மனுநீதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் மனுநீதி, சவுண்ட் பார்ட்டி,காசு இருக்கணும்,எங்க ராசி நல்ல ராசி உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தான் அவரது மனைவி தயாரிப்பாளர் ஆர்.பி. பூரணி மாரடைப்பால் காலமானார. தற்போது தயாரிப்பாளர் ராமசந்திரனும் மறைந்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1