29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
கிழக்கு

பயணத்தடையாம்: சம்பவத்தையே அறியாத சாய்ந்தமருது வாசிகள்!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

எனினும் சிலர் சுகாதார நடைமுறைகளையும் மீறிச்செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரேனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் பயணக்கட்டுப்பாட்டை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றும்(1) இன்றும்(2) அதனை மீறும் வகையில் சிலர் செயற்படுவதை காணமுடிகின்றது.

கல்முனை நகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பயணத்தடை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டாலும் சாய்ந்தமருது போன்ற புறநகர் பகுதிகளில் பயணத்தடையினை மீறியை வகையில் சிலர் செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது.
பொலிஸாரும் இராணுவத்தினரும் பயணத்தடைகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும் அதனையும் மீறும் வகையில் சிலரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இது தவிர அம்பாரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்தி பிரதேச மக்களை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் அந்தந்த பிரதேச கொவிட் 19 தடுப்பு செயலணிக் குழு முன்னெடுத்து வருகின்றன.

இதனை விட மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி மீன் போன்ற பொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட நடமாடும் வியாபாரிகள் ஊடாக விற்பனை செய்யும் நிலையில் மீன் இறைச்சி விநியோகத்திற்காக அனுமதிகள் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளன.

இருந்த போதிலும் எந்த செயலணி உருவாக்கப்பட்ட போதிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறுவதுடன் பயணத்தடையினை மீறுவோருக்கு எதிராக எந்தவித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படாமை தொடர்பில் பொலிஸ் தரப்பு தகவலின் ஊடாக அறிய முடிகின்றது.

மேலும் சாய்ந்தமருது பகுதியில் நேற்றும் இன்றும் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு எந்த தேவைகளுக்காகவும் வீதிகளில் வாகனங்களில் பயணித்தல், இளைஞர்கள் குழுக்களாக சேர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வீதிகளில் வீணாக சுற்றித் திரிதல், மீன் பிடிப்பவர்களைத் தவிர ஏனையோர் கடற்கரைகளில் அனாவசியமாக கூடி இருத்தல், அத்தியாவசிய பொருட்களுக்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் அதிகமானோர் கூடி இருத்தல், கொரோனா சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வீதிகள் மற்றும் மைதானங்களில் இளைஞர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுதல் ,செயற்பாடுகள் தொடர்கதையாகவே உள்ளன.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

Leave a Comment