இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா இன்று (ஜூன் 2) தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜாவின் நண்பரும், இயக்குநருமான பாரதிராஜா இளையராஜாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
உனக்கும்,
உன் இசைக்கும்,
நம் உறவுக்கும்,
என்றும் வயதில்லை
வாழ்த்துக்கள்டா.
உயிர்த் தோழன்
பாரதிராஜா.
இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.
‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘நிழல்கள்’, ‘சிகப்பு ரோஜக்கள்’ உள்ளிட்ட பாரதிராஜாவின் பல்வேறு திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பாரதிராஜா படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.