சீனாவின் சினோவாக் கோவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
சினோபார்முக்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெறும் இரண்டாவது சீன தடுப்பூசி இது.
இனிமேல், கோவக்ஸ் திட்டத்தில் இந்த தடுப்பூசியையும் பயன்படுத்தப்படும்.
ஏற்கனவே பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த தடுப்பூசி, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் செலுத்தப்பட்டு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் வழங்கப்படும்.
சினோவாக் தடுப்பூசி போட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் அறிகுறியை தடுத்ததாகவும், ஆய்வு செய்யப்பட்ட 100% பேரில் கடுமையான அறிகுறிகளையும் மருத்துவமனையில் சேர்ப்பதையும் தடுத்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“கோவக்ஸ் திட்டத்தில் பங்கேற்கவும், அவர்களின் அறிவு மற்றும் தரவைப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவர பங்களிக்கவும் உற்பத்தியாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்“ என உலக சுகாதார அமைப்பின் உதவி இயக்குநர் மரியாங்கெலா சிமாவோ தெரிவித்து்ளளார்.
சீனா, சிலி, பிரேசில், இந்தோனேசியா, மெக்ஸிகோ, தாய்லாந்து மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தடுப்பூசி ஏற்கனவே வழங்கப்படுகிறது.
மே மாத இறுதியில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 600 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியதாக சினோவாக் கூறுகிறது. 430 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும் கூறுகிறது.
சினோவாக்கின் முக்கிய நன்மைகளில் ஒன்று, இது ஒரு நிலையான குளிர்சாதன பெட்டியில் 2-8 டிகிரி செல்சியஸில் சேமிக்கப்படலாம். இதனால் வளரும் நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,