கொழும்பிற்குள் நுழையும் வாகனங்களிற்கு 24 மணிநேர செல்லுபடியாகும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை இன்று முதல் ஒட்டப்படும்.
அத்தியாவசிய வாகனங்கள் சோதனைச் சாவடிகளில் பல சோதனைகளைத் தவிர்ப்பதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் அஹித் ரோஹன தெரிவித்தார்.
பேலியாகொட, மவுண்ட் லவ்னியா, வத்தல, நுகேகொட மற்றும் வெல்லம்பிட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஆவணங்களை பொலிசார் பரிசோதித்த பின்னர், ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்று அவர் கூறினார்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், பல சோதனைச் சாவடிகளில் தரிக்க வேண்டியிருப்பதன் காரணமாக கடமைக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதாக முறைப்பாடுகள் வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்படி, மீண்டும் மீண்டும் சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்படுவதை தடுப்பதற்கும், மேலும் திறமையான ஆய்வு முறையை உறுதி செய்வதற்கும் இந்த அமைப்பு செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார்.
சோதனைச் சாவடிகளில் நிறுவனங்கள் வழங்கிய ஆவணங்களை ஒப்படைப்பதிலும், புதிய ஸ்டிக்கர் திட்டத்தை அமல்படுத்துவதிலும் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு டி.ஐ.ஜி அஜித் ரோஹன பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.