கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் போட்டுக் கொள்வதற்கு ஆர்வத்தை தூண்டும் விதமாக, தன்னார்வ அமைப்பின் அறிவிப்பு நல்ல பலனை கிடைத்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த ஒரு சில தினங்களாக சற்று கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், கொரோனாவிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், கோவளம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களிடையே கொரோனா தடுப்பூசி போடுவதில் போதிய விழிப்புணர்வும், ஆர்வமும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, அங்கு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த வந்த தன்னார்வை அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு எழுந்துள்ளது.
அதன்படி, கொரோனா இல்லாத கோவளம் என்ற பெயரில் புதிய முயற்சியாக, கொரோனா தடுப்பூசியை போடும் மக்களுக்கு பிரியாணியும், குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், வாஷிங் மெஷின் மற்றும் தங்க நாணயம் ஆகிய பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கோவளம் பகுதி மக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருன்றனர்.