விஜய் டிவி குக் வித் கோமாளி தொகுப்பாளர் ரக்சன் தற்போது இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ரசிகர்களை பெற்று பிரம்மாண்ட மைல் கல்லை கடந்து இருக்கிறார். அதற்காக ரசிகர்களுக்கு அவர் நன்றி கூறி இருக்கிறார்.
குக் வித் கோமாளி ஷோ தமிழ் சின்னத்திரையில் மிகப்பெரிய ஹிட் ஆன ஷோ. சமையல் செய்பவர்கள், அவர்களுக்கு தொல்லைகள் கொடுக்கும் கோமாளிகள் என வித்தியாசமான கான்செப்டில் இந்த ஷோ ரசிகர்களை கவர்ந்தது.
இந்த ஷோவினை தொகுத்து வழங்கியவர் ரக்சன். குக் வித் கோமாளியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் followers பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது தர்ஷன் இரண்டு மில்லியன் followers பெற்று உள்ளார். இந்த சாதனையை அவர் மகிழ்ச்சியுடன் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
“We are now a family of 2M ❤️my heartfelt thanks to each one of u all.. no words I love you ” என அவர் ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி கூறி இருக்கிறார்.