கணவர் மீது பொய் குற்றச்சாட்டு கூறிய நடிகை சாந்தினி மீது நடவடிக்கை கோரி முன்னாள் அமைச்சர் மனைவி புகார் அளித்துள்ளார்.
சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடி’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்திருந்தார்.
அதில் கடந்த 5 வருடமாக நானும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் காதலித்து வந்ததாகவும், அதை நம்பி அவருடன் நெருக்கமாக பழகி மூன்று முறை கருவுற்றேன். பின்னர் அவரின் வற்புறுத்தலால் கருவை கலைத்தேன். திருமணம் செய்துக்கொள்வதாக என்னை ஏமாற்றிவிட்டார். திருமணம் செய்ய அவரிடம் கேட்டால் கூலிப்படை வைத்து மிரட்டுகிறார். எனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் எனவும் மிரட்டுகிறார் என கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார் நடிகை சாந்தினி.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கட்டாய கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி, ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் என் கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டை நடிகை சாந்தினி கூறியுள்ளார். இதனால் எனக்கு மன உளைச்சலை ஏற்பட்டுள்ளதாகவும், நடிகை சாந்தினி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த புகாரில் வசந்தி கூறியுள்ளார்.