கொரோனா வைரஸ் தொற்றால் நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன.கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் நேபாளம் 41வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 5,285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாளத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஒரே நாளில் 68 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 4.56 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். நேபாளத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் விகிதம் 79.7 சதவீதமாக உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1