ஆபிரிக்காவில் கொரோனா தொற்று 48 லட்சத்தை தாண்டியது!

Date:

ஆபிரிக்க கண்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து ஆபிரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஞாயிறு நிலவரப்படி, ஆப்பிரிக்க கண்டத்தில் இதுவரை 43, 23, 795 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,30,286 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

ஆபிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை தென் ஆபிரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 1.66% மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

ஒக்டோபர் 17ஆம் திகதி வழக்கு விசாரணையின் பின்னரே பூரண நிம்மதி கிடைக்கும் என அனோஜனின் சகோதரன்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

சட்டப்படியே ஞானசாரரை மன்னித்தேன்

அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்