வடமாகாணத்தில் மேலும் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 83 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் இன்று 897 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது.
இதில், யாழ் மாவட்டத்தில், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என 83 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் என, 7 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா பொது வைத்தியசாலையில் 3 பேர் என 8 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒருவர், என, 5 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
மன்னார் மாவட்டத்தில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றிற்குள்ளானார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவர், , வவுனியா விமானப்படையினர் 6 பேரும்
தொற்றிற்குள்ளாகினர்.




