தென்மராட்சி ஆதார வைத்தியசாலையின் தாதியொருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவர், பிள்ளைகள் உட்பட மேலும் 4 குடும்ப உறுப்பினர்கள் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு வெளியான பிசிஆர் முடிவில் அவர்கள் தொற்றிற்குள்ளானது தெரிய வந்தது.
இரண்டு தடுப்பூசிகளையும் அந்த தாதி ஏற்கனவே செலுத்தியிருந்தார். தற்போது அவர் உட்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
அந்த குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் தொற்றிற்குள்ளாகி அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1