நடிகர் கிருஷ்ணா அவரது அம்மாவுக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரரான கிருஷ்ணா அஞ்சலி, இருவர் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் ‘அலிபாபா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். ‘கற்றது களவு’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். ‘கழுகு’ திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கடைசியாக கழுகு படத்தின் இரண்டாம் பாகத்தில் கிருஷ்ணா நடித்தார்.
மற்ற நடிகர்களைப் போலவே கிருஷ்ணாவும் குடும்பத்தினருடன் உற்சாமாகமாக நேரத்தை செலவிட்டு வருகிறது. தற்போது கிருஷ்ணா அவரது அம்மாவுக்கு முடிவெட்டியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் “உங்கள் அம்மா ஒரு ஹேர் கட் செய்ய விரும்பும் போது, உங்களால் வேறு ஏற்பாடு செய்ய முடியாத போது நீங்கள் தான் பொறுப்பை எடுத்தாக வேண்டும். தற்போது உங்கள் அம்மாவுக்காக நீங்கள் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆகவேண்டும் என்றால் மாறத் தான் வேண்டும். நான் ஒரு ஸ்டைலிஸ்ட் என்று சொல்லிக் கொள்வது மிகையானாலும் அம்மாவுக்கு ஹேர்கட் பிடித்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.