Pagetamil
இந்தியா உலகம்

இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் போட்ட கண்டிஷன்!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நிபந்தனை ஒன்றையும் விதித்துள்ளார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370ஆவது பிரிவை நீக்கி, இரு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலத்தை கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு பிரித்தது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் கலந்த விமர்சனங்கள் இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதக் கணக்கில் வீட்டு சிறைகளில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த பிரச்னையை சர்வதேச விவகாரமாக மாற்ற பாகிஸ்தான் முயன்று வருகிறது. அத்துடன் உலக நாடுகளின் ஆதரவை பெறவும் அந்நாட்டு பிரதமர் முயன்று வந்தார். ஆனால், அவரது முயற்சி தோல்வியையே சந்தித்தது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளித்தால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பாகிஸ்தான் பிரதமர்

இம்ரான் கான் கூறியுள்ளார். பாகி்ஸ்தான் மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் இம்ரான் கான் நேரலையில் பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யாமல் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், காஷ்மீர் மக்களை நாங்கள் கைவிட்டதுபோல் ஆகிவிடும். எனவே, பழைய நிலையை மீண்டும் கொண்டு வந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் கடந்த பிப்ரவரி மாதம் திடீர் திருப்பமாக ஒப்புக்கொண்டன. இதையடுத்து, பதற்றத்தை தணிப்பது குறித்து திரைமறைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா: சிறப்பு விமானத்தில் இன்று அழைத்து வரப்படுகிறார்

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

தண்​டவாளத்​தில் படுத்து ரீல்ஸ் எடுத்​தவர் கைது

Pagetamil

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!