சில வருடங்களுக்கு முன் பின்னணி பாடகி சின்மயி, வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியாக அணுகினார் என குறிப்பிட்டிருந்தார். இவரை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அவரின் பெயர் உள்ள விருதை பெறுவதற்கு தாம் மகிழ்ச்சி அடைவதாக வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அத்துடன் நிற்காமல் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படமும் பதிவிட்டார். இவருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கும் நெருக்கமாக இருக்கும் நட்பை குறிப்பிட இதை Retweet செய்து “WOW” என்று கமெண்ட் அடித்துள்ளார் சின்மயி.
இதற்கு நடிகையும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான காஜல், சின்மயின் திருமணத்தில் வைரமுத்து கலந்துகொண்டு வாழ்த்திய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து “வாவ்” என்று பதிவிட்டுள்ளார். சின்மயி, தனது திருமணத்திற்கு முன்பாக தான் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையில், எதற்காக இவரின் திருமணத்திற்கு வைரமுத்துவை சென்று சந்தித்து பத்திரிக்கை வைத்து அழைத்தார் என்கிற கேள்வியும் வருகிறது.