26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

யாழில் முடக்கப்பட்ட பகுதியிலிருந்து கழிவு வாய்க்கால் வழியாக வெளியேறும் கில்லாடிகள்: இன்று வசமாக சிக்கிய 5 பேர்!

நல்லூரடி, அரசடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை விட்டு வெளியில் வந்த 5 இளைஞர்களை, 7 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறுயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி இளைஞர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தல் விதிகளை மீறி வெளியில் சென்று வருகிறார்கள்.

வீதிகளில் பொலிசார் கடமையிலிருந்தாலும், அந்த பகுதிகளிலுள்ள கழிவு வாய்க்கால்கள் வழியாக வெளியேறுவதாக பிரதேசவாசிகள் தெரிவி்க்கின்றனர்.

இதையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்திய யாழ்ப்பாண பொலிசார், அந்த இடத்தைச் சேர்ந்த 5 பேரை யாழ்ப்பாணம் சிவன் கோயிலடியில் வைத்து இன்று அதிகாலை 4 மணிக்கு மடக்கிப் பிடித்தனர்.

அவர்கள் 5 பேரும் நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள பயணத் தடையை மீறி வீதியில் நின்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் ஐவரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறி வந்திருந்தமை தெரியவந்துள்ளது. அத்துடன், அவர்கள் மதுபோதையில் இருந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் ஐவரும் இன்று மாலை யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

தனிமைப்படுத்தல் பிரதேசத்திலிருந்து வெளியேறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பி அறிக்கை முன்வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த மேலதிக நீதிவான், சந்தேக நபர்கள் ஐவரையும் வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
3

இதையும் படியுங்கள்

பச்சையரிசி மற்றும் தேங்காய் விலை குறைப்புக்கான கோரிக்கை – இராதாகிருஸ்ணன்

east tamil

நாட்டு நலனுக்காக மாற்றியமைக்கப்பட்ட 77வது சுதந்திர தினம்

east tamil

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

9 மாத சிறை: நீதிமன்றத்துக்குள் ரகளை செய்த ஞானசாரர்!

Pagetamil

ஊடகங்களில் பரவும் போலிச் செய்தி!

Pagetamil

Leave a Comment