25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
சினிமா

ரசிகர்களிடம் அவசர உதவி கேட்ட விஜய் பட நடிகை: வைரலாகும் வீடியோ!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய நண்பர் அபினேஷ் மேல் சிகிச்சைக்காக தங்களால் இயன்ற உதவி செய்யுமாறு கூறி வீடியோ ஒன்றை தனது இணையத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை சுனைனா.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசும் தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டித்துள்ளது தமிழக அரசு. அண்மையில் நடிகை சுனைனாவும் கொரோனோவால் பாதிக்கபட்ட மீண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கபட்ட தன்னுடைய நண்பர் ஒருவருக்கு மருத்துவ உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

விஜய் நடித்த ’தெறி’ உள்ளிட் எட பல திரைப்படங்களில் நடித்த நடிகை சுனைனா சற்று முன் தனது வலைதளப் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் அவர், பொதுவாக நான் இந்த மாதிரி வீடியோ போடுறது இல்லை. என்னோட பேஸ்புக், இன்ஸ்டால என்னை பாலோ பண்றவங்களுக்கு தெரியும். ஆனால் இது ஒரு எமர்ஜென்சி. எனக்கு தெரிந்த அபினேஷ் என்பவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்னோட தமிழ்ல ஏதாவது தப்பு இருந்தா அட்ஜெஸ்ட் பண்ணிகோங்க. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு தற்போது நிதி உதவி தேவைப்படுகிறது.

அவருடைய மேல்சிகிச்சைக்காக தேவைப்படும் நிதியை தயவு செய்து அனைவரும் கொடுத்து உதவுங்கள். நானே சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளதால் அதன் வலி எனக்கு தெரியும். சிறிய தொகையாக இருந்தாலும் பெரிய தொகையாக இருந்தாலும் உதவி செய்து அவருக்கு தேவையான நிதியை கொடுத்து அவரை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இந்த வீடியோவை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து அவினாஷ் மருத்துவத்திற்க்கு உதவி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் சுனைனா. அந்த பதிவுடன் பணம் செலுத்த வேண்டிய வங்கியின் லிங்கையும் இணைத்துள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் அவருக்காக இந்த வீடியோவை ஷேர் செய்வதாக கமெண்ட் செய்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

Leave a Comment