நடிகை ஜனனி இதற்கு முன் தன் பெயருடன் சேர்ந்து வைத்திருந்த ஐயர் என்பதை சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து நீக்கியுள்ளார்.
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை குறிப்பிடுவதில்லை. ஆனால் வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடிகைகள் தமிழில் நுழையும் போது தங்கள் பெயருடன் சாதி பெயரை சேர்த்தே வைத்திருக்கின்றனர்.
சமூகத்தில் காலம் காலமாக நடந்து வரும் சாதிய தீண்டாமை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்து மக்கள் சாதியை மறந்து வரும் இந்த காலத்தில் பெயரின் பின்னர் சாதி பெயரைக் குறிப்பிடுவது அவர்களை சாதி வெறியராகவோ அல்லது தான் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டுவதாகவோ அமைந்துள்ளது.
இந்நிலையில் தெகிடி, அவன் இவன் போன்ற படங்களில் நடித்த நடிகை ஜனனி ன் பெயருடன் சேர்ந்து வைத்திருந்த ஐயர் என்ற சாதி பெயரை நீக்கி ஜனனி என்று மட்டும் சமூக வலைத்தளங்களில் மாற்றியுள்ளார். மேலும் “மாற்றம் ஒன்றே மாறாதது. நீங்கள் வேண்டும் என்று விரும்பும் மாற்றத்தை நீங்களே துவங்குங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜனனியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.