ஜம்மு-காஷ்மீரின் ஆகஸ்ட் 5, 2019 க்கு முந்தைய நிலையை இந்தியா மீட்டெடுத்தால் மட்டுமே பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ஆகஸ்ட் 5, 2019 அன்று 370 வது பிரிவின் கீழ் ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இம்ரான் கான் நாட்டு மக்களுடன் ஒரு நேரடி கேள்வி பதில் அமர்வின் போது, ஆகஸ்ட் 5’ஆம் தேதி இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இந்தியா திரும்பப் பெற்றால், நாங்கள் நிச்சயமாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இம்ரான் கான் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இந்தியா தனது சொந்த பிரச்சினைகளை தீர்க்கும் திறன் கொண்டது என்றும் இந்தியா பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் அதனுடன் சாதாரண அண்டை உறவுகளை விரும்புவதாக இந்தியா பாகிஸ்தானிடம் கூறியுள்ளது. பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானிடமே உள்ளதாக இந்தியா கூறியுள்ளது.
அண்டை நாட்டை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களால் 2016 ல் பதான்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. இது பின்னர் யூரியில் உள்ள இந்திய இராணுவ முகாமில் ஒரு தாக்குதல் உட்பட அடுத்தடுத்த தாக்குதல்களால் மேலும் மோசமாகியது.
எனினும், கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை மீட்டெடுக்க பிப்ரவரியில் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டபோது சமீபத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பதற்றத்தைத் தணிக்க அதிகாரிகள் இராஜதந்திர வழிகளின் மூலம் தொடர்புகொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பணவீக்கம் உள்ளிட்ட உள்நாட்டு பிரச்சினைகள் குறித்த பல கேள்விகளுக்கும் இம்ரான் கான் பதிலளித்தார். மேலும் பொருட்களின் விலையைக் குறைக்க தனது அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாகவும் உறுதியளித்தார்.
இந்த செயல்முறையை படிப்படியாகக் குறிப்பிடுவதால், அடுத்த நாட்களில் பாகிஸ்தான் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி