பருத்தித்துறையில் 50 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
படகொன்றில் பருத்தித்துறை முனை பகுதிக்கு கஞ்சா கொண்டு வரப்பட்டது. கடற்படையின் சுற்றிவளைப்பில் கஞ்சா மீட்கப்பட்டது.
எனினும், சந்தேக நபர்கள் தப்பியோடி விட்டனர்.
கஞ்சா கொண்டு வந்த படகு மீட்கப்பட்டது. இதன் அடிப்படையில் சம்பந்தப்ப்டவர்கள் வலைவீசி தேடப்படுகிறார்கள்.




