மற்ற நாடுகளைவிட இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்குத்தான் அதிக செல்வாக்கு, செல்வமும் இருக்கிறது. இந்திய அணியில் இடம்பெற்று, அதுவும் நட்சத்திர வீரராக இருந்தால்போதும் அனைத்து வசதிகளும் வீடு தேடி வரும். விளம்பரம் போன்றவை மூலம் கோடிக்கணக்கில் காசு பார்க்கலாம். தொடர்ந்து இந்திய அணிக்காக கடுமையாக உழைத்து நட்சத்திர வீரராகத் திகழ்பவர்களுக்கு மத்திய அரசின் ஒருசில துறைகள் தாமாக முன்வந்து கௌரவ அரசாங்க உத்தியோகமும் கொடுக்கிறார்கள்.
அப்படி தற்போது அரசாங்க வேலையில் இருக்கும் டாப் 3 இந்திய வீரர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
ஜோகீந்தர் ஷர்மா:
2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி2 உலகக் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியின் கடைசி ஓவரை சிறப்பாக வீசி இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஜோகீந்தர் ஷர்மா. அதன்பிறகு இரண்டு வருடங்கள் வரை கிரிக்கெட் விளையாடினார். ஜோகீந்தர் ஓய்வு அறிவித்த உடனே ஹரியான மாநில காவல்துறை இவருக்குக் கௌரவ டி.எஸ்.பி பதவி வழங்கியது. தற்போதுவரை பணியில் இருக்கிறார்கள்.
மகேந்திரசிங் தோனி:
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக நிகழ்ந்த மகேந்திரசிங் தோனி 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்ற உடனே இந்திய ராணுவம் இவரைக் கௌரவிக்கும் வகையில் பதிவு வழங்கி சிறப்புச் செய்தது. தோனிக்கு ராணுவத்தின்மீது பற்று அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே.
சச்சின் டெண்டுல்கர்:
கிரிக்கெட் ஜாம்பவான், கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 2010ஆம் ஆண்டு இவருக்கு இந்திய விமானப்படை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. தற்போதுவரை அப்பதவியில் நீடித்து வருகிறார்.