27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
சினிமா

மாஸ்டர் பட பிரபலத்தின் வீட்டில் 15மாத குழந்தை முதல் 83வயது பாட்டி வரை 14 பேருக்கு கொரோனா!

இயக்குநர் ரத்னகுமாரின் வீட்டில் 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வைபவ், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் படம் மூலம் இயக்குநரானவர் ரத்னகுமார். அமலா பாலை வைத்து ஆடை படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் படத்திற்கு வசனம் எழுதியவர். அவர் போட்டிருக்கும் ட்வீட்டை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ரத்னகுமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு என்று தெரிவித்துள்ளார். rathna kumarஅவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளதாவது,

பெரிய கண்டத்தை தாண்டிவிட்டீர்கள். இனி எல்லாம் நல்லதாகத் தான் நடக்கும். உடம்பை பார்த்துக் கொள்ளவும். குடும்பத்தோடு கொரோனா என்றால் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது. நீங்கள் குணமானதே எங்களுக்கு போதும். தைரியமாக இருங்கள் அண்ணா என தெரிவித்துள்ளனர்.

கொரோனாவின் இரண்டாம் அலை எப்பொழுது தான் ஓயுமோ என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இரண்டாம் அலையில் திரையுலகை சேர்ந்த சிலர் உயிரிழந்துவிட்டனர். மேலும் சில பிரபலங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடுகிறார்கள்.

சில பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். அதில் சிலர், தங்களின் கொரோனா போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுள்ளனர்.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு திரையுலக பிரபலங்கள் பலர் மக்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன்

Pagetamil

இயக்குநர் அருண்குமார் திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Pagetamil

ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!

Pagetamil

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

Leave a Comment