கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, திறைச்சேரி செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல, நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியன் பந்து விக்கிரம, இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் தலைவர் சாலிய விக்கிரசூரிய ஆகியோரும், தனியார்துறை நிறுவனங்களின் தலைவர்களான துஷான் கொடிதுவக்கு, எஸ்.ஜெராட் ஒன்டச்சி, ரொஹான் டி சில்வா ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1