வடக்கில் இன்று 135 பேருக்கு தொற்று: யாழில் மட்டும் 96 பேர்!

Date:

வடமாகாணத்தில் இன்று 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 951பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில்,

கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், கிளிநொச்சி தொற்று நோயியல் வைத்தியசாலையில் ஒருவர் என 8 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், மல்லாவி சுகாதார சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் என 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தல், மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவர், நௌவி தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவர் என 15 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலை ஒருவர்,  யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 45 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் என 96 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில், பூவரசங்குளம் வைத்தியசாலையில் 4 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் 2 பேர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை 4 பேர் என 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...

மக்கள் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி சேவைகளை மேலும் வினைத்திறனாக்க முடியும்” – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர்

மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றுகின்ற நிறுவனங்களாக உள்ளூராட்சி சபைகள் விளங்குவதுடன், பொதுமக்களினதும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்