24.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
சினிமா

“இதுவரை யாரும் பார்த்தே இருக்காத பல படங்களில் நடித்திருக்கிறேன்” ப்ரியங்கா சோப்ரா!

சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு பெண் சுயமாக இல்லளவு உயரத்தை அடைந்துள்ளது உண்மையிலே பாராட்டத்தக்க செயலாகும்.

ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் கால்தடம் பதிப்பதற்கு முன்னர் 50-க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ப்ரியங்கா சோப்ரா தன்னுடைய சினிமா பயணத்தில் சந்தித்த தோல்விகள் குறித்து பேசியுள்ளார்.

“எல்லாரும் ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது. நானும் பல தோல்விகளைச் சந்தித்திருக்கிறேன். இதுவரை யாரும் பாத்திராத பல படங்களிலும் நான் நடித்திருக்கிறேன்.

தோல்விகளுக்குப் பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தான் உங்களை வரையறுக்கிறது. என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை ஒரு ஏணி. அது ஒரு போதும் ஒரு இலக்கில் முடிவதில்லை.

priyankachopra

ஆசியாவைச் சேர்ந்த நாம், அடைய வேண்டிய இலக்கிற்காக மற்றவர்களை விடவும் வேகமாக ஓட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம். நான் ஒரு முக்கிய முன்னணி பெண்மணியாக பார்க்கப்பட விரும்பினேன். வழக்கமான ஒருத்தியாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன். அதற்கு 10 வருட கடின உழைப்பு தேவைப்பட்டது. இறுதியாக, நான் ஆசைப்பட்ட இடத்திற்குச் செல்ல முடிந்தது போல் உணர்கிறேன். எனவே, நீங்களே மட்டுமல்ல, உங்களுக்குப் பின் வரும் அனைவருக்கும் குறிக்கோள்களை நோக்கி தொடர்ந்து ஓடுவதே பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். தெற்காசியாவின் அடுத்த தலைமுறையினருக்கு, அவர்கள் விரும்பும் இலக்குகளை அடைவதற்கு என்னைப் போல் 10 ஆண்டுகள் ஆகக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

Leave a Comment