Pagetamil
இலங்கை

வெளிநாட்டு செல்ல முயன்ற இளைஞர்கள் கடற்கரையில் தொடர்ந்து சிக்கிய சம்பவம்: ஏற்பாடு செய்து விட்டு, போட்டும் கொடுத்த கில்லாடி கைது; முன்னாள் போராளியாம்!

வெளிநாடு அனுப்புவதாக கூறி வடக்கு இளைஞர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்தரமேஷ் என்பவர் நேற்று சாவகச்சேரி பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் சிலாபம், கற்பிட்டி பகுதியில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்ற பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். வடக்கு, கிழக்கு இளைஞர்கள் பலர் வெளிநாட்டு கனவு ஊட்டப்பட்டு, முகவர்களிற்கு பெருந்தொகை பணம் செலுத்தி, சிலாபத்தை அண்டிய கடற்கரைகளிற்கு கொண்டு செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டனர்.

அண்மைய மாதங்களில் பல சந்தர்ப்பங்களில் பெருமளவமான இளைஞர்கள் இப்படி கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டிருந்தார். ரமேஷ் என அழைக்கப்படுபவரே இதன் சூத்திரதாரி. அவர் முன்னாள் போராளியென பொலிசார் குறிப்பிடுகிறார்கள்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, இளைஞர்களிடம் பெருந்தொகை பணம் பெற்று, கற்பிட்டி. கலாவத்த. சிலாவத்துறை. போன்ற இடங்களுக்கு வரவழைத்து ஓர் இடத்தில் தங்க வைத்துள்ளார். பின்னர், அவரே கடற்படை புலனாய்வு பிரிவுக்கு அந்த தகவலை வழங்கியுள்ளார். இப்படி அண்மைய சந்தர்ப்பங்களில் பலர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், இந்த சூட்மத்தை அறிந்த பொலிஸ் புலனாய்வு பிரிவு இவரை பல நாள் தேடி வந்தது. எனினும், தென்மராட்சி பகுதியில் பல இடங்களில் தலைமறைவாக இருந்து ஆசாமி டிமிக்கி விட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று சாவகச்சேரி பொலிஸ் புலனாய்வாளர்கள் ஆசாமியை மடக்கிப் பிடித்தனர்.

இந்த நபர் ஏற்கனவே தாய்நிலம் அறக்கட்டளை. சுவிஸ் தாய்நிலம். போன்ற நிறுவனங்களை நடத்தியதாகவும், அதிலும் முறைகேடு குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
4

இதையும் படியுங்கள்

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

கிளிநொச்சியில் கால் வீக்கத்தால் துன்பப்படும் காட்டு யானை

east tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தடங்கல்

east tamil

2025வது ஆண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று

east tamil

Leave a Comment