தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது இரகசியமாக கிரிக்கெட் விளையாடிய இளைஞன்: 15 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!

Date:

நயினாதீவு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட இளைஞன், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் இரகசியமாக நண்பர்களை இணைத்து கிரிக்கெட் விளையாடியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 15 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பிசிஆர் சோதனையின் பின்னர் இளைஞன், தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், சுகாதாரத்துறையினருக்கு தெரியாமல் நண்பர்களை தொலை பேசி மூலம் அழைத்து இரவு நேர மின்னொளியில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்சூ முன்தினம் வெளியான பிசிஆர் அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் பின் நடந்த தடமறியும் விசாரணையில், அவருடன் நேரடித் தொடர்பை மேற்கொண்டோர் விபரம் வெளியானது.

குறித்த நபருடன் நேரடித் தொடர்பினை மேற்கொண்ட அத்தனை குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்றில் இருந்து முற்றாக நீங்கியதும் குறிப்பிட்ட நபருக்கும் கூடிப் பழகி விளையாடியவர்களுக்கும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அப்பகுதி சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்