இசைமைப்பாளர் இமான் பகிர்ந்துள்ள அவரது மகள்களின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.இமான் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்திற்கு தற்போது இமான் இசையமைத்து வருகிறார்.
இந்த ஊரடங்கு காலத்தில் திரைத்துறை பிரபலங்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். தற்போது இமானும் தன்னுடைய செல்ல மகள்கள் உடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மகள்கள் மீதான பாசத்தை வெளிப்படுத்தி இமான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“வெரோனிகா டோரதி இமான் மற்றும் பிளெசிகா கேதி இமான்… என் மகள்கள் தான் எனக்கு உலகம். நான் அவர்களை வானளவிற்கு நேசிக்கிறேன்.
பரலோகத்தில் யாருடைய சிம்மாசனம் இருக்கிறது என்று நான் உங்களிடம் கண்களை உயர்த்துகிறேன். அடிமைகளின் கண்கள் தங்கள் எஜமானின் கையைப் பார்ப்பது போல, ஒரு வேலைக்காரியின் கண்கள் அவளுடைய எஜமானியின் கையைப் பார்ப்பது போல, நம்முடைய கண்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவருடைய இரக்கத்தைக் காண்பிக்கும் வரை எ அவரை நோக்கி இருக்கும்” என வசனத்தையும் பகிர்ந்துள்ளார்.”
இமானின் இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.