மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் கல்விப் பணிப்பாளராக திரு.அமரசிறி பியதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய ஈ.பி.டி.கே. ஏக்கநாயக்க அண்மையில் ஓய்வு பெற்றதையடுத்து இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 28.5.2021 மத்திய மாகாண கல்வி திணைக்களத்தில் கல்விப் பணிப்பாளராக தமது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக நுவரெலியா கல்வி வலயத்தின் வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1