சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 37 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிவிட்டதாகக் கூறி ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது அவர் நடித்த பட வீடியோ தான்.
கொரோனாவின் முதல் அலையில் இந்தியா தப்பியதை பார்த்து பிற நாடுகள் வியந்தன. ஆனால் இரண்டாம் அலையால் இந்தியா படும்பாட்டை பார்த்து உலக நாடுகள் கவலைப்படுகின்றன. இந்தியாவுக்கு பல நாடுகள் உதவி செய்து கொண்டிருக்கின்றன.
கொரோனா வைரஸுக்கு அன்புக்குரியவர்களை இழந்துவிட்டு பலரும் தவிப்பதை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. சமூக வலைதளங்கள் பக்கம் சென்றால் இன்று என் அண்ணன் கொரோனாவால் இறந்துவிட்டார், மனைவி இறந்துவிட்டார், மகள் போய்விட்டார் என்று மக்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கமோ, ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடய பெட் கிடைக்க யாராவது உதவி செய்ய முடியுமா, மருந்து கிடைக்குமா என்று பலரும் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கொரோனாவின் இரண்டாம் அலை எப்பொழுது தான் ஓயுமோ என்கிற மனநிலைமையில் பலரும் இருக்கிறார்கள். இந்நிலையில் மூன்றாவது அலை வேறு வரும் என்ற பேச்சால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடவுளே, பழையபடி நாங்கள் சந்தோஷமாக வாழ்வது எப்பொழுது, வைரஸ் பயமில்லாமல், மாஸ்க் இல்லாமல் நடமாடுவது எப்பொழுது என்று கேட்கிறார்கள். இப்படி எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸ் பற்றிய பேச்சு தான். சமூக வலைதளங்களில் சொல்லவே வேண்டாம்.
37 years back.. #Rajnikanth escaping from #coronavirus 😍☺️ pic.twitter.com/PX5r0D0Se6
— மேகவியல் ✨ (@itz_Nandhini) May 27, 2021
இந்நிலையில் தான் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பாயும் புலி படத்தின் வீடியோவை வெளியிட்டு 37 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனாவிடம் இருந்து தப்பிய சூப்பர் ஸ்டார் என சமூக வலைதளவாசிகள் கூறி வருகிறார்கள்.அவர்கள் ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பதை வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும். அந்த வீடியோவை பார்த்தால் ரஜினியே குபீரென்று சிரித்துவிடுவார்.
அவர் 37 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனாவிடம் இருந்து தப்பித்தாலும் தற்போது இரண்டாவது அலையை சமாளிக்க தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 50 லட்சம் நிதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.