மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தால் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு ஒரு தொகுதி தண்ணீர் தாங்கிகள் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் மன்னார் மாவட்ட பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை (28)மாலை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு சென்று ஆயிரம் லிட்டர் கொள்வனவு கொண்ட 25 தண்ணீர் தாங்கிகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலையின் காரணமாக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களின் குடிநீர் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக குறித்த தண்ணீர் தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.