தமிழில் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்றும், அதற்காக பிரமாண்ட தொகை சம்பளமாக பேசப்பட்டு உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.பிக் பாஸ் ஐந்தாவது சீசன் ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக அது தள்ளிப்போகலாம் என தெரிகிறது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் நான்காவது சீசன் தொடங்கியது. கொரோனா தாக்கம் அதிகம் இருந்ததால் தான் இவ்வளது தாமதமாக தொடங்கியது. இந்த வருடம் வழக்கம்போல ஜூன் மாதமே பிக் பாஸ் தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் தற்போதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக லாக்டவுன் போடப்பட்டு உள்ளதால் ஐந்தாவது சீசனை தொடக்க தாமதம் ஆகும் என தெரிகிறது.
இந்த வருடத்தின் இறுதிக்கு பிக் பாஸ் 5 தள்ளி வைக்கப்படலாம் என தெரிகிறது.
கமல் சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அவர் இனி படங்கள் மற்றும் பிக் பாஸில் பங்கேற்க வரமாட்டார் என செய்தி பரவியது. சிம்பு உள்ளிட்ட வேறு சில நடிகர்கள் உடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல் படி கமல்ஹாசன் தான் இந்த ஐந்தாவது சீசனையும் தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகி இருக்கிறது.
கமல்ஹாசன் நடத்தி வரும் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய பிரபலம் ஒருவர் அளித்த பேட்டியில், கமல் பிக் பாஸ் ஷோவுக்காக பெரிய தொகையை அட்வான்ஸாக வாங்கி அதை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தினார் என கூறி இருந்தார். அதனால் பிக் பாஸ் 5க்கும் கமல் தான் தொகுப்பாளர் என்பது உறுதியாகி உள்ளது.பிக் பாஸ் ஐந்தாவது சீசன் தொகுத்து வழங்குவதற்காக கமல்ஹாசன் ஒரு பெரிய தொகையை சம்பளமாக பெற உள்ளார் என தகவல் தற்போது பரவி வருகிறது.
அது 50 கோடி ருபாய் வரை இருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. படத்தில் நடித்தால் கூட இவ்வளவு சம்பளம் வராதே என்று பலரும் இதனால் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.