நோய் எதிர்ப்பு சக்தி என்பது முழு உலகம் முழுவதும் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அதிலும் குறிப்பாக தற்போதுள்ள மோசமான சூழலில் ஒவ்வொருவரும் கொரோனா போன்ற தொற்று நோயிலிருந்து காத்துக் கொள்ள அதிகமாக போராட வேண்டியுள்ளது.
கொரோனா வந்ததிலிருந்து மனித சமூகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே. வயதானவர் கூட நல்ல ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருந்தால் மோசமான தொற்று நோயிலிருந்து விடுபடுகிறான். அதுவே சிறிய வயதில் இருக்கும் பலர் மோசமான உடல் நலனால் தன் உயிரை இழக்கும் சோகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இங்கு ஒவ்வொரு ராசியினரும் எந்த உடல் சாந்த பிரச்சினைகளிலிருந்து கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியினர் அதிகம் கோபம் மற்றும் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பவர்கள். இவர்கள் குறுகிய மனநிலையுடன் இருப்பதோடு, மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்.இவர்கள் தோள், மார்பு, முதுகு பகுதியில் வலியால் அவதிப்பட வாய்ப்புள்ளது. இவர்கள் தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது நல்லது. அதனால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உங்களின் மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் செய்வது சிறந்த பலனைத் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் பெரும்பாலும் நேரடியாக எந்த கருத்தையும் கூறக்கூடிய மனநிலை கொண்டவர்கள். பல சமயம் முகத்தை கடுமையாக வைத்துக் கொள்வார்கள். இதனால் சிறிய விஷயத்திற்குக் கூட அடிக்கடி சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள்.
இவர்களிடம் இருக்கும் எதிர்மறையான சிந்தனைகளை விடுத்து நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நல்ல புரோட்டீன் சத்து, வைட்டமின் சி நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது அவசியம். சிலருக்கு ஒவ்வாமை அதிகமாக இருக்கும். அதற்கேற்ற உணவை எடுத்துக் கொள்வதும், ஆரோக்கியத்திற்கான சீரான உணவை எடுத்துக் கொள்வது நல்லது.
மிதுனம்
மிதுன ராசியினர் மகிழ்ச்சி மற்றும் சோகம் என கலவையான மனநிலையுடன் இருப்பார்கள். இவர்கள் எந்த காரணமும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையில் அதிக மன அழுத்தத்தை உணர்வார்கள். இவர்களுக்கு நரம்பு சாரந்த சில பிரச்னைகள் சந்திக்க வாய்ப்புள்ளது. மேலும் இவர்கள் செரிமான அமைப்பு, குடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது நல்லது.பசையம் இல்லாத உணவு, தேநீர் அருந்துதலைக் குறைத்துக் கொள்ளவும். காலையில் நடைப்பயிற்சி செய்வது அவசியம்.
கடகம்
கடக ராசியினர் தங்களின் அன்றாட வாழ்வில் எளிய விஷயங்களுக்கு கூட அதிக உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்வில் நல்ல உடல் ஆரோக்கியம் பெற மன சோர்வு, பதற்றத்தை விடுத்து, சுறுசுறுப்பாக வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள்.இவர்கள் உடலில் அதிக சுமையை ஏற்றி செல்லுதல் போன்ற விஷயங்களை தவிர்த்து நல்ல நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியினர் சுயநலம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். தன் ஆளுமையை மற்றவர்கள் மீது திணிக்க முயல்வார்கள். தங்களின் செயல்களை மிகைப்படுத்துவார்கள். சிலர் துக்கமின்மையால் அவதிப்படுவார்கள்.
சரியான தூக்கம், ஓய்வு எடுத்துக் கொண்டாலே இவர்களின் பல பிரச்னைகள் நீங்கிவிடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள அதிக மனக்குழப்பத்தை விடுத்து சரியான ஓய்வு எடுத்துக் கொள்ளவும். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடவும்.
கன்னி
கன்னி ராசியினர் மன அழுத்தத்துடன் இருப்பவர்களின் முக்கியமானவர்கள். எப்போதும் சில விஷயங்களைக் குறித்து மனம் மற்றும் உடலை வருத்துக் கொள்பவர்களாக இருப்பார்கள். மேலும் உடல் பருமன் இவர்களுக்கு முக்கிய பிரச்னையாக இருக்கும். இவர்கள் தங்களின் உடல் பருமனைக் குறைக்க உடற்பயிற்சியும், மன பலத்தைப் பெற தியானம், யோக போன்றவற்றை செய்வது நல்லது.
துலாம்
துலாம் ராசியினர் சற்று அதிர்ஷ்டசாலிகள் என்றே கூறலாம். இவர்கள் நல்ல நோய் எதிப்பு சக்தியும், உடலமைப்பையும் கொண்டவர்கள். இவர்கள் பெரியளவில் மனக்குழப்பத்தை விட்டு விட்டு அமைதியாக உங்கள் செயல்களில் வெற்றியை காண முயலவும். உணவில் வைட்டமின், புரதம் நிறைந்ததாகவும், கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் உடல் ஆரோக்கியத்தில் சற்று துரதிர்ஷ்டவசமானவர்கள். அடிக்கடி நோயால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் வேலையில் செலுத்தும் கவனம் இவர்களின் ஆரோக்கியத்திற்குக் கொடுப்பதில்லை.
இவர்கள் சிறப்பாக வாழ ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பதோடு, சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சியை செய்வது நல்லது. 8 மணி நேரமாவது நல்ல தூக்கத்தை எடுத்துக் கொள்வது அவசியம்.
தனுசு
தனுசு ராசியினர் தங்களின் வேலை, குடும்ப சூழலால் ஏற்படும் மனக் குழப்பத்தால் எப்போதும் அமைதியற்றவர்களாக இருப்பது வழக்கம். இவர்களுக்கு பெரும்பாலும் கால் அல்லது உடலின் கீழ் பகுதியில் வலி ஏற்படக்கூடும்.
இவர்கள் தங்களின் இடுப்பு மற்றும் மூட்டு பகுதியை வலுவாக வைத்திருக்க அதற்கேற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதோடு, இந்த இடங்களில் பிரச்னையை உணரும் போது சரியான மருத்துவத்தை எடுத்துக் கொள்ளவும். கண்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிகள் ஆரோக்கியத்தில் சற்று அக்கறையுடன் இருப்பது நல்லது. இவர்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதுடன், மன ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது நல்லது. இவர்கள் மன அமைதி பெற நல்ல ஒய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.மனக்குழப்பம் அதிகமாகும் போது உங்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். நீங்கள் சரியான உடல் பயிற்சியை செய்வதோடு, தியானத்தில் ஈடுபடுவது நல்லது.
கும்பம்
கும்ப ராசியினர் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் தியானம், யோக போன்ற விஷயங்களை செய்வதால் மன பதற்றம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகம் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசியினர் சற்று அதிர்ஷ்டமானவர்கள் என்று சொல்லலாம். பெரியளவில் மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள். இவர்கள் பெரும்பாலானோர் தங்களின் மனம், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிக முயற்சிகளை எடுத்துக் கொள்வார்கள். அரிதாக நோய்வாய்ப்படக்கூடிய இவர்கள் முன்னெச்சரிக்கையாகப் புரத சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது நல்லது. தியானம், யோக போன்றவற்றைக் கடைப்பிடிக்கவும்.