Pagetamil
சினிமா

வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படம் குறித்த அறிவிப்பு!

சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு.

வெங்கட்பிரபு தற்போது சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிம்பு ஜோடியாக கல்யாணி மற்றும் எஸ்ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

அரசியல் மாநாடு ஒன்றில் நடக்கும் அதிரடி திருப்பங்களாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் முதன்முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ‘மாநாடு’ திரைப்படத்தின் ரிலீஸிற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இது இவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம்.

படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. அண்மையில் துவங்கிய மாநாடு திரைப்படத்தின் டப்பிங் பணிகள், முழு ஊரடங்கு காரனமாக ஒத்து வைக்கப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்த பிறகு, தனது 10 வது திரைப்படத்தின் பணிகளை வெங்கட்பிரபு துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரம்ஜானை முன்னிட்டு மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட முடிவு செய்திருந்தனர் படக்குழுவினர். ஆனால் எதிர்பாராத விதமாக ரம்ஜானுக்கு இரு தினங்களுக்கு முன்பு வெங்கட் பிரபுவின் தாயார் உயிழந்ததால், பர்ஸ்ட் சிங்கிள் பின்னொரு நாளில் வெளியிடுவோம் என அறிவித்திருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இந்நிலையில் நேற்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் லாக்டவுன் முடிந்த பிறகு தான் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

Leave a Comment