25.5 C
Jaffna
December 24, 2024
Pagetamil
இந்தியா

மயங்கி விழுந்த மணப்பெண்; மணமகள் தங்கையுடன் நடந்தேறிய திருமணம்; ஊர் மக்கள் அதிர்ச்சி!

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு விசித்திர திருமணம் நடந்துள்ளது. மணமேடையில் திடீரென இறந்த மணமகள். இறந்த உடலை பக்கத்து அறையில் வைத்துவிட்டு, மணமகள் தங்கையுடன் நடந்தேறிய திருமணம், ஊர் மக்கள் அதிர்ச்சி.

கோவிட் எண்ணிக்கை உயர்ந்தாலும், குறைந்தாலும், சில இடங்களில் நிச்சயித்த திருமணங்கள் குறித்த தேதிகளில் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. சிலர், கோவிட் ப்ரோடோகால் பின்பற்றி திருமணங்கள் நடத்துகிறார்கள். சிலர், கொரோனா பற்றிய அச்சம் சிறிதும் இன்றி, வாழ்வில் ஒருமுறை நடக்கும் விழாவில் அனைத்து உறவுகளும் இருக்க வேண்டும் என எல்லை மீறவும் செய்கிறார்கள்.

கொரோனா காலத்தில் சில வினோத திருமணங்களும் நடந்தேறியுள்ளன. ஆனால், இந்த திருமணம் அவற்றில் இருந்து சற்று விசித்திரமானதாகவும் நடந்தேறியுள்ளது.

இட்டாவா, உத்திர பிரதேசத்தில் இருக்கும் ஊர். இங்கே தான் இந்த விசித்திர திருமணம் நடந்துள்ளது. மணநாள் அன்று விழா நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் மணப்பெண் மயங்கி சுருண்டு விழுந்தார்.

மயங்கி விழுந்த மணப்பெண் திடீர் மாரடைப்பு காரணத்தால் மரணம் அடைந்ததாக அறியப்படுகிறது. ஆனால், சினிமாக்களில் நடக்கும் ட்விஸ்ட் போல இங்கேயும் ஒன்று நடந்தது. இரு குடும்பத்தாரும் சேர்ந்து பேசி, இறந்த மணப் பெண்ணின் சகோதரிக்கும், மணமகனுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இது அனைத்தும், திருமணத்தின் முக்கிய சடங்கான மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ளும் சமயத்தில் நடந்துள்ளது. மணமகள் சுரபி மணமகன் மஞ்சேஷ் குமார் பின் கைக்கோர்து ஓமகுண்டம் சுற்றி வரும் போது மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

அருகில் இருந்த மருத்துவர், பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என உறுதி செய்தார். மேலும், மரணத்தின் காரணம் மேஜர் ஹார்ட் அட்டாக் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆகையால், ஒரே நொடியில் மணவிழா, சோகம் சூழந்தது.

சுரபியின் சகோதரர் சௌரப்,” அந்நேரத்தில் என்ன செய்வதென்று அறியாது இருந்தோம். அப்போது தான் இருவீட்டாரும் உட்கார்ந்து பேசி, திடீரென எனது இளைய தங்கை நிஷாவிற்கும் மணமகனுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்தனர். இருவீட்டார் ஒப்புதலின் பேரில் தான் திருமணம் நடந்தது”என கூறியுள்ளார்.

Bride died during marriage rituals: மயங்கி விழுந்த மணப்பெண், சகோதரிக்கு  நடந்த கொடூரம். இப்படியுமா திருமணம் செய்வாங்க! - the bride died due to a  heart attack during the marriage ...

இறந்த மணப்பெண் சுரபியின் உடலை வேறொரு அறையில் வைத்துவிட்டு, மஞ்சேஷ் – நிஷா திருமணம் அதே மேடையில் நடந்தேறியுள்ளது. மணமக்கள் கிளம்பிய பிறகு, இறந்த பெண் சுரபிக்கான இறுதி சடங்குகள் நிகழ்ந்துள்ளது.

சுரபியின் மாமா அஜாப் சிங்,”இது மிகவும் கடினமான காரியம் தான். ஒரு மகள் இறந்து கிடைக்கும் போது, மற்றொரு மகளுக்கு திருமணம் செய்து வைப்பது கஷ்டமாக இருந்தது. அனைவரும் கலவையான உணர்வலையில் தான் காணப்பட்டனர். சுரபியின் மரணத்தை கடந்து, நாங்கள் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்” என கூறி இருக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

Leave a Comment