கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.
தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் இச்செய்தியை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் கூட செய்யவில்லை. எனவே அவர் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதனையடுத்து தமிழில் உருவாகிவுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படத்தின் 3வது சிங்கிள் பாடலான ‘நேத்து…’ என்கிற தனுஷ் எழுதி, பாடியுள்ள பாடல் வெளியானது .
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பணியாற்றியது குறித்து ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ தனது ட்விட்டரில் ஜகமே தந்திரம் படக்குழுவுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டது மிக மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இந்தியா மிக அருமையான நாடு. உங்களோடு பணியாற்றியதில் நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். என தெரிவித்துள்ளார்.