25.6 C
Jaffna
January 11, 2025
Pagetamil
விளையாட்டு

எதுக்கு வம்பு….மைக்கேல் வான் எடுத்த அதிரடி முடிவு!

சிறந்த கேப்டன் கோலியா, தோனியா? என்ற கேள்வி மைக்கேல் வான் பதிலளித்துள்ளார்.

மகேந்திரசிங் தோனி, விராட் கோலி இருவரும் இந்திய அணியின் மிகச்சிறந்து கேப்டன்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தோனி தலைமையிலான இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை, 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்று அசத்தியது. அதுமட்டுமல்ல டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதல்முறையாக முதலிடம் பிடித்ததும் தோனி கேப்டனாக இருந்த போதுதான்.

அதேபோல் விராட் கோலியும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்து வருகிறார். இவர் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி 60 போட்டிகளில் 36 வெற்றிகளைக் குவித்துள்ளது. இவர் தலைமையில் 2019/19ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு முதல்முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.

இவர்களில் யார் சிறந்த கேப்டன் என்பதைக் கணிப்பது மிகக் கடினம். இந்நிலையில் இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், இக்கேள்விக்கு அற்புதமாகப் பதிலளித்துள்ளார்.

“மகேந்திரசிங் தோனிதான் சிறந்தவர். இந்திய டி20, ஒருநாள் அணி இன்று சிறப்பாகச் செயல்படுகிறது என்றால் அதற்கு அவர்தான் முக்கிய காரணம். இந்திய அணியை வளர்த்தெடுத்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு. இவர் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகுதான் இந்திய அணி உலக அளவில் வல்லமைமிக்க அணியாகத் திகழ்ந்தது” எனக் கூறினார்.

மகேந்திரசிங் தோனி 2015, ஜனவரி மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். அதன்பிறகு கோலிக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கிடைத்தது. 2017ஆம் ஆண்டுவரை ஒருநாள், டி20 கேப்டனாக இருந்த தோனி அதன்பிறகு அதிலிருந்தும் நீக்கப்பட்டார் செய்யப்பட்டார். தற்போது மூன்றுவிதமான கிரிக்கெட்டிற்கும் கோலிதான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

கோலி தலைமையிலான இந்திய அணி 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிவரை முன்னேறியது. அடுத்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிவரை சென்றது. ஒருமுறைகூட கோப்பை வெல்ல முடியவில்லை. இருப்பினும், கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி உலக அளவில் நம்பர் 1 அணியாகத் திகழ்ந்து வருகிறது.

“விராட் கோலியை சிறந்த டெஸ்ட் கேப்டன் எனக் கூறலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதனால், டெஸ்ட் என எடுத்துக்கொண்டால் தோனியைவிட விராட்தான் சிறந்த கேப்டன். ஒட்டுமொத்தமாகச் சிறந்த கேப்டன் யார் எனக் கேட்டால் அது தோனிதான்” என மைக்கேல் வான் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

Leave a Comment