யாழ் மாவட்டத்தில் நேற்று 24 நாள், 6 மாத கைக்குழந்தைகளிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ் மாவட்டத்தில் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகளில் ஒரு தொகுதியினரின் முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. இதில் யாழ் மாவட்டத்தில் 33 பேருக்கு தொற்று உறுதியானது.
இதில், 24 நாளான குழந்தையொன்றும், 6 மாதமான குழந்தையொன்றும் உள்ளடங்குகின்றன.
தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த, பிறந்து 24 நாளான குழந்தைக்கு தொற்று உறுதியானது. குழந்தையின் தாயாரும் ஏற்கனவே தொற்றிற்குள்ளாகியிருந்தார். குழந்தைக்கு 3 நாட்களாக காய்ச்சல் இருந்தமையினால், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியானது.
குழந்தை தெல்லிப்பழை ஆதார வைததியசாலையில் சிகிசிசை பெற்று வருகிறது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 மாத குழந்தையும் நேற்று தொற்றுக்குள்ளானது. குழந்தையின் தாயாரான தனியார் காப்புறுதி நிறுவன உத்தியோகத்தர் ஏற்கனவே தொற்றிற்குள்ளாகியிருந்தார்.
குழந்தைக்கு நேற்று தொற்றுதியானது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. எனினும், குழந்தையின் தந்தைக்கு தொற்று ஏற்படவில்லை.