Pagetamil
இலங்கை

நேற்று 66 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன!

மேற்கு மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 66 வாகனங்களை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பயணக் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில் அந்த வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த நடவடிக்கை நடத்தப்பட்டது. கார்கள், வான்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், கொள்கலன்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் என 700 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன.

இதில், 39 வாகனங்கள் அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக பயணித்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளின் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் நோயாளிகளைக் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த காலகட்டத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

ட்ரோன் கமராக்களின் உதவியுடன் நேற்று பொரளையில் ஒரு சிறப்பு நடவடிக்கை நடத்தப்பட்டது. இதில்தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னாள் தலைவர்களின் வெளிநாட்டு பயண செலவுகள்

east tamil

‘சிறைக்குள் வீட்டுச்சாப்பாடு கிடைக்கவில்லை’: ஞானசாரரின் சோக்கதை!

Pagetamil

கோட்டாவின் மந்திரவாதி ஞானாக்காவுக்கு ரூ.280 மில்லியன் இழப்பீடு!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்

Pagetamil

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!