சம்பந்தர் கேட்டார்; மஹிந்த கொடுக்கிறார்: திருகோணமலைக்கு ஒரு பிசிஆர் இயந்திரம்!

Date:

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பிசிஆர் பரிசோதனை இயந்திரமொன்றை வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மரணங்களும் அடிக்கடி இடம்பெற்று வருகின்றது. எனினும், கொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் பரிசோதனை இயந்திரம் திருகோணமலை வைத்தியசாலையில் இல்லை.

இதனால் பிசிஆர் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கு மட்டக்களப்பு மற்றும் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு அனுப்பி வைப்பதனால் காலதாமதமாகி வருகிறது.

இது தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தாார்.

இதையடுத்து, பிசிஆர் பரிசோதனை உபகரணத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை தாம் மேற்கொள்வதாக பிரதமர் தம்மிடம் வாக்குறுதி அளித்தாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்