கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களில் எண்பது சதவீதமானவை தீயில் அழிந்துள்ளன.
கடற்படை செய்தித் தொடர்பாளர் கப்டன் இந்திகா டி சில்வா கூறுகையில், கொழும்பு துறைமுகத்திற்கு அருகே எரியும் இரசாயனம் அடங்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் முன் மற்றும் நடுப்பகுதிகளில் ஏற்பட்ட தீ தணிந்தாலும், பின்புறத்தில் இன்னும் பலத்த தீ ஏற்பட்டுள்ளது என்றார்.
கடற்படை மற்றும் பிற தரப்பினரால் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிலவும் வானிலை காரணமாக கப்பலை மீட்பது ஒரு சவாலாகிவிட்டது என்றும் கப்டன் இந்திக டி சில்வா கூறினார்.
கப்பலின் கொள்கலன்களில் சுமார் 80 சதவீதம் நேற்றிரவு வரை தீவிபத்தால் அழிந்துள்ளன, மீட்பு முயற்சிகள் நடந்து வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.




