25.9 C
Jaffna
March 29, 2024
சினிமா

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. ஆனால் இந்த தகவலை சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை உறுதி செய்யவில்லை.

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருக்கிறார். மாநாடு சிம்புவின் கெரியரில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாநாடை அடுத்து பத்து தல படம், கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம், சுசீந்திரனுடன் சேர்ந்து ஒரு படம், ராமுடன் ஒரு படம் என்று சிம்பு ஏகத்திற்கும் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவலை சிம்பு தரப்போ, வெற்றிமாறனோ இதுவரை உறுதி செய்யவில்லை.

வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார்.

வெற்றிமாறன் ஒரு பக்கம் பிசியாக இருக்க, சிம்பு மறுபக்கம் படுபிசியாக இருக்க, இவர்கள் எப்படி இப்போதைக்கு சேர்ந்து படம் பண்ணுவார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு இரண்டு படம் பண்ணும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாராம் லோகேஷ். அதன்படி கமலை ஹீரோவாக வைத்து விக்ரம் படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

மற்றொரு படத்தில் சிம்பு நடிப்பார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கமல் சிம்புவிடன் போனில் பேசினாராம். அதன் பிறகு லோகேஷ் சிம்புவை தொடர்பு கொண்டு கதை சொன்னதாக தகவல் வெளியானது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

புதிய படத்தில் விஜய் சம்பளம் ரூ.250 கோடி?

Pagetamil

Leave a Comment