நேற்று 2,377 COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 172,277 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், 2,325 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்த 52 நபர்களும் நேற்று COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
28,601 பேர் தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த 1,203 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 142,378 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,572 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1