பத்து மொழிகளில் வெளியாகும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்!

Date:

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தயாராகி வருகிறது. டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. அக்டோபர் மாதம் 13-ந் தேதி தசரா பண்டிகையையொட்டி இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது .

தற்போது நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கொரோனா இரண்டாம் அலையால், இந்த முறையும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெளியீடு 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு முக்கியமான வருவாய் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை. ஆர்ஆர்ஆர் படத்தின் அனைத்து மொழி 300 கோடிகளுக்கு மேல் (சுமார் 325 கோடிகள்) விலை பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமையை Zee5 கைப்பற்றியுள்ளது .

ஆர்ஆர்ஆர் வெளியீட்டுக்கு முன்பே 850 முதல் 875 கோடிகள்வரை நிச்சயம் சம்பாதிக்கும் என்கிறார்கள். இது நடந்தால் படவெளியீட்டுக்கு முன்பே 450 – 475 கோடி லாபம் தயாரிப்பாளர்களின் பாக்கெட்டுக்கு வந்து சேரும்.

இந்தியாவில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஆர்.ஆர்.ஆர் வெளியாகிறது. இந்தியாவில் படத்தின் டிஜிட்டல் உரிமையை ஸீ 5 மற்றும் நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. அதாவது, ஆர்ஆர்ஆர் திரையரங்கில் வெளியான பிறகு ஸீ 5 ஓடிடி தளத்தில் அதன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பதிப்புகளை பார்க்கலாம். இந்தி பதிப்பு மட்டும் நெட்பிளிக்ஸில்.

படத்தின் இந்திப் பதிப்பு ஸீ சினிமாவிலும், தெலுங்கு, தமிழ், கன்னட பதிப்புகள் ஸ்டார் விஜய்யிலும், மலையாளப் பதிப்பு ஏஷியாநெட்டிலும், வெளியாகும். ஆர்ஆர்ஆர் படத்தை ஆங்கிலம், போர்ச்சுகல், கொரியன், துருக்கி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஐந்து மொழிகளிலும் படத்தைப் பார்க்கலாம். இந்த மொழிகளில் படத்தை ‘டப்’ செய்வார்களா இல்லை சப் டைட்டிலுடன் ஓட்டுவார்களா தெரியவில்லை.

spot_imgspot_img

More like this
Related

வித்தியா கொலை: சுவிஸ் குமார், கூட்டாளிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு!

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

போதைப்பொருளுடன் சிக்கிய அதிபரின் மனைவியின் பின்னணி

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய...

நியூயோர்க் விரைவில் கம்யூனிசமாக மாறும்: ட்ரம்ப்

நியூயார்க் மக்கள் இடதுசாரி ஜோஹ்ரான் மம்தானியை அடுத்த மேயராகத் தேர்ந்தெடுத்த பிறகு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்