ட்விட்டர், வாட்சப், ஃபேஸ்புக் என கடந்த ஓரிரு நாட்களாக ஒரு சண்டைக்காட்சி வீடியோ வைரலாகி வருகிறது. சண்டையிடும் நபர்கள், விஜயோ, அஜித்தோ அல்ல, சிறுவர்கள் தான். ஆனால், உருவாக்கம் அற்புதமாக அமைந்திருக்கிறது.
இதுவரை நாம் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி போன்றவர்கள் தான் மாஸான சண்டைக் காட்சிகளில் இளம் பெண்களை காப்பாற்றி அசத்துவதை பார்த்திருப்போம்.
ஆனால், இப்போது அந்த இடத்திற்கு ஒரு இளம் சூறாவளி அறிமுகம் ஆகியுள்ளார். பொதுவாகவே சினிமாவில் சாதாரண காட்சிகளை விட, பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளுக்கு தான் நிறைய பொருட்செலவு ஆகும். பட்ஜெட் அதிகரிக்க காரணமே இவை தான். ஆகையால் தான் காமர்ஷியல் சினிமாக்கள் தயாரிப்பது கடினமான ஒன்று.
ஆனால், இந்த இளம் சூறாவளியின் மாஸான சண்டைக்காட்சி ஜீரோ பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார்கள். இளம் சூறாவளி, காப்பாற்றப்படும் படும் பெண்கள், கடத்திய நபர்கள், அடியாட்கள் என அனைவரும் பதின் வயதே உடைய சிறுவர்கள். ஆனால், காட்சிகளும், தொழில்நுட்பமும், தமிழ் திரைப்பட தரத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல. மிக நுட்பமாக கவனித்தாலும் மிக சிறிய தவறுகள் கண்டுப்பிடிப்பதே கடினம் தான்.
நடித்தவர்கள் கண் முன் தெரிகிறார்கள், உருவாக்கியவர்கள் யார் என தெரியவில்லை. பெயர், முகம், அடையாளம் தெரியாத அந்த அசாத்திய திறமைசாலிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்களால் இந்த வீடியோவை பிளே செய்யாமல், வெறும் தம்ப்னெயிலில் பார்க்கும் போது ஏதோ சிறுபிள்ளை தனமாக யாரோ எடுத்திக்கிறார்கள் போல, அப்படி என்ன இருக்க போகிறது என்று தான் தோன்றியது.
ஆனால், வீடியோவை பிளே செய்து பார்க்க துவங்கும் போது தான், முதல் நொடியிலேயே நமது நினைப்பை எல்லாம் தவிடுப்பொடி ஆகிவிடுகிறார்கள் இந்த இளம் சூறாவளிகள். வரும் நாட்களில், எதிர்காலத்தில் இவர்கள் சிகரம் தொட தமிழ் சமயத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
Zero பட்ஜெட்ல ஒரு உலகத்தர MASS fight!
வேற லெவல் 🔥🔥🔥 pic.twitter.com/VRcCAxWKZC— CinemaTicket (@CinemaTicket_) May 24, 2021