குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சிவாங்கியின் பிறந்தநாளுக்கு அண்ணன் சிவகார்த்திகேயன், நண்பேன்டா அஸ்வினும் கேக்கை பரிசாக அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கண்டமேனிக்கு பிரபலமாகியிருப்பவர் சிவாங்கி. இந்நிலையில் அவர் பெரிய திரைக்கும் சென்றுவிட்டார். புதுமுகம் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தான் தயாரித்து, ஹீரோவாக நடித்து வரும் டான் படத்தில் சிவாங்கிக்கு வாய்ப்பளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
டான் படத்தில் நடித்து வந்த சிவாங்கிக்கு மேலும் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. கனா படம் புகழ் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ஆர்ட்டிகிள் 15 இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் சிவாங்கியும் நடிக்கிறார்.
இரண்டு படங்களில் நடித்து வரும் சிவாங்கியை தேடி மேலும் சில பட வாய்ப்புகள் வந்திருக்கிறதாம். இந்நிலையில் சிவாங்கி நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார்.
அவருக்கு சின்னத்திரையை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். சிவாங்கிக்கு சிவகார்த்திகேயன் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி என்கிற வாசகம் அடங்கிய கேக் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
sivakarthikeyan அந்த கேக்கை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டு, இதை சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை, நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா என்று சிவாங்கி தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த செயலை பார்த்த ரசிகர்களோ, என்ன தான் பெரிய நடிகராக இருந்தாலும் சிவாண்ணா மாறவில்லை என்று பெருமையாக பேசுகிறார்கள்.
சிவாங்கியின் பிறந்தநாளுக்கு அஸ்வின் கொடுத்த பரிசை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள் என்பது அவருக்கு தெரியாமல் இல்லை. சிவகார்த்திகேயனை போன்றே அஸ்வினும் சிவாங்கிக்கு சுவையான கேக் ஒன்றை பரிசளித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரௌடி என்று வாழத்தியுள்ளார். அந்த கேக்கையும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டிருக்கிறார் சிவாங்கி.
முன்னதாக அஸ்வின் பற்றி சிவாங்கி கூறியதாவது, என்னடா இது, இவ்ளோ அழகான ஒரு பையனு சொல்லிட்டு தான் நான் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் அவர் அமைதியாக இருந்தார். அது தான் என் ஆவலை தூண்டியது என்றார்.